உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில் உள்ள பீட்டி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு ஸ்கூட்டியிலிருந்து திடீரென ஒரு ராஜநாகம் (கோப்ரா) வெளியே தலைகாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபாகஞ்சிலிருந்து மௌ நோக்கி வந்து கொண்டிருந்த அந்த ஸ்கூட்டி ஓட்டுநர், வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே ஹேண்டில் பாருக்குள் ஏதோ நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால், பதற்றமடையாமல் சாதுர்யமாக வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினார்.
चलती स्कूटी में निकला सांप, चालक के उड़ गए होश!
यूपी के मऊ में चलती स्कूटी में अचानक निकला सांप. चालक ने जैसे ही सांप को देखा उसके होश उड़ गए और उसने स्कूटी सड़क के किनारे खड़ी कर दी और उसे भगाने की कोशिश करने लगा. काफी मशक्कत के बाद सांप स्कूटी से निकलकर भाग गया.#Mau #Snake… pic.twitter.com/H3FctbQdZm
— NBT Hindi News (@NavbharatTimes) March 5, 2026
சுற்றியிருந்த மக்கள் வேடிக்கை பார்க்க, அந்த ஓட்டுநர் ஒரு குச்சியின் உதவியுடன் பாம்பை மெதுவாக வெளியேற்ற முயன்றார். சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, அந்த விஷப்பாம்பு ஸ்கூட்டிக்குள் இருந்து வெளியே வந்து பாலத்திற்கு கீழே தப்பி ஓடியது. பாம்பை அடிக்காமல், அதுவாகவே போகட்டும் என்று அவர் காட்டிய நிதானமும், சமயோசித புத்தியும் அங்கிருந்தவர்களையும் சமூக வலைதளவாசிகளையும் வியக்க வைத்துள்ளது. வெயில் மற்றும் மழைக்காலங்களில் எலிகளைத் தேடி பாம்புகள் வாகனங்களுக்குள் புகுந்துவிடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
