தமிழக கவர்னராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி, அதிரடியாக மேற்குவங்க மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பல்வேறு விவாதங்களுக்கு இடையே இந்த முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

​ஆர்.என்.ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள மாநில கவர்னராக இருக்கும் ராஜேந்திர அர்லேகருக்குத் தமிழக கவர்னராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வெளியான இந்தத் திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல்களைக் கையாளவே ஆர்.என்.ரவி அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.