மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில், பில்லி சூன்யம் மற்றும் மாந்திரீகம் செய்வதாகக் கூறி வாலிபர் ஒருவருக்குக் கட்டாயமாகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, அவரைப் பெண்ணாக மாற்றிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட வாலிபரை அவரது நண்பர்களே ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்து இந்தச் செயலைச் செய்துள்ளனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ரகசியமாகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததோடு மட்டுமல்லாமல், அவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தும் சித்திரவதை செய்துள்ளனர்.
இதில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான மந்திரவாதியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாலிபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
