ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில், வகுப்பறையிலேயே ஆசிரியர் ஒருவரை மாணவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருந்தபோது ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆசிரியர் மாணவனைத் திட்டியபோது, மிகவும் அவதூறான மற்றும் அவமானகரமான சொற்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே ஆசிரியரை சரமாரியாகக் குத்தியும், தாக்கியும் உள்ளார். வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, இருவரையும் விலக்கிவிட முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த மோதல் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்