தமிழகத்தின் டாப் செலிபிரிட்டி ஜோடியான விஜய் – சங்கீதா விவாகரத்து செய்தி கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ‘ஹாட் டாபிக்’ ஆகப் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு மெகா ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.

இருவருக்கும் இடையே இருந்த கசப்புணர்வை நீக்க விஜய் தரப்பு தீவிரமாகச் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தச் சமரச முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளதாகவும், விஜய்யின் கோரிக்கையை ஏற்று சங்கீதா தனது விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இதனால் மீண்டும் இந்த நட்சத்திரத் தம்பதி ஒன்று சேருவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சங்கீதா தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.