பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடும் இந்த காலத்தில், வறுமையின் பிடியில் சிக்கினாலும் தனது தாயை ஒரு பாரமாக நினைக்காத மகனின் செயல் ஒட்டுமொத்த இணையதளத்தையும் கண் கலங்க வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், உடல்நிலை சரியில்லாத, நடக்க முடியாத தனது வயதான தாயை ஒரு நபர் தனது பழைய சைக்கிளின் பின் இருக்கையில் துணியால் கட்டி, பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்.
வறுமை ஒரு பக்கம் வாட்டினாலும், தாய்க்கு ஒரு கஷ்டம் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர் காட்டும் அந்த அக்கறை காண்போரை நெகிழச் செய்துள்ளது.
View this post on Instagram
“உண்மையான அன்பு காசு பணத்தில் இல்லை, இது போன்ற செயல்களில் தான் இருக்கிறது” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“பெத்த தாயை கடைசி வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் இந்த மகன்தான் நிஜமான ஹீரோ” என்று பாராட்டுக்கள் குவிந்து வரும் அதே வேளையில், இந்த ஏழை மகனின் பாசத்தைக் கண்டு பலரும் தங்களது கண்ணீரை அடக்க முடியாமல் பதிவிட்டு வருகின்றனர். சமூகத்தின் முகத்தில் அறையும் விதமாக அமைந்துள்ள இந்த பாசப் போராட்டம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
