மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆட்டோ டிரைவர் செய்துள்ள கொடூரமான செயல் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது. தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர் ஒருவர், மாணவி என்று கூடப் பாராமல் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் கடும் அச்சமடைந்த மாணவி, யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் கடந்த ஏழு நாட்களாகத் தனக்குள்ளேயே அந்த வேதனையை மறைத்து வைத்துள்ளார்.

இருப்பினும், பயத்திலும் மன அழுத்தத்திலும் மாணவி தவிப்பதைக் கண்ட பெற்றோர், அவரை அன்புடன் விசாரித்த போதுதான் அந்தப் பிஞ்சு நெஞ்சம் பட்ட துயரம் வெளியே தெரிய வந்துள்ளது.

தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுது கொண்டே மாணவி விவரித்ததைக் கேட்டுப் பெற்றோர் நிலைகுலைந்து போனார்கள். இது குறித்து உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அந்த ஆட்டோ டிரைவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.