தொழில்நுட்ப விவாதங்களை விட அங்கு நடந்த குளறுபடிகளால்தான் இப்போது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. மாநாட்டிற்கு வந்திருந்த முக்கிய விருந்தினர்களின் உடமைகள், லேப்டாப்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மர்மமான முறையில் திருட்டுப் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இதற்கு காரணம் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், இந்த அசௌகரியத்திற்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். “உலக நாடுகளுக்கு முன்னால் இந்தியாவின் நற்பெயருக்கு இந்தச் சம்பவம் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது;

ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட ஒழுங்காக நடத்தத் தெரியாத அரசாக இது இருக்கிறது” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர் தொழில்நுட்பம் பேசும் மாநாட்டிலேயே சாதாரண திருட்டுச் சம்பவங்கள் நடந்திருப்பது பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.