மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த எம்பிஏ மாணவியின் கொலை வழக்கில், அவரது காதலன் பியூஷ் தமோத்தியா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. கடந்த ஜனவரி 13-ம் தேதி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவியின் சடலத்தைக் கண்டு போலீசாரே மிரண்டு போயுள்ளனர்.
தனது காதலியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற பியூஷ், சடலத்துடன் உடலுறவு கொண்டதாகவும், அதன் பிறகு மாணவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொடூரம் காட்டியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலைக்குப் பிறகு மாணவியின் செல்போனைத் திருடிச் சென்ற அவன், அவரது நண்பர்கள் குழுவில் ஆபாச வீடியோக்களை அனுப்பி அந்த பெண்ணின் பெயரைக் கெடுக்க முயன்றுள்ளான்.
இதற்கெல்லாம் மேலாக, தலைமறைவாக இருந்தபோது ‘ஆவிகளை எப்படித் திரும்ப அழைப்பது?’ என்று யூடியூபில் தேடி, காதலியின் ஆவியுடன் பேசுவதற்கு நள்ளிரவில் மாந்திரீகச் செயல்களில் ஈடுபட்டுள்ளான்.
கைதான பிறகும் எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல், “நடந்தது நடந்துவிட்டது, அதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என அவன் திமிராகப் பேசியது போலீசாரையே ஆத்திரமடையச் செய்துள்ளது.
