டெல்லியில் ரீல்ஸ் மோகத்தால் இன்ஃப்ளூயன்சர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களின் கதவுகளைத் திடீரெனத் திறந்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்துப் பதிவிடுவதை ஒரு கும்பல் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தங்களின் வீடியோ ‘வைரல்’ ஆக வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களின் உயிரைப் பணையம் வைக்கும் இவர்களது செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

​இந்த அறிவிலித் தனமான செயலால் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்குப் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. “லைக்ஸுக்காக அடுத்தவன் உயிரோடு விளையாடும் இந்தக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பொதுமக்கள் டெல்லி காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆபத்தான போக்கைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.