நடிகை த்ரிஷா குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் இருப்பதே நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்றும், ஒருவருடைய பேச்சோ அல்லது செயலோ மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்தியிருந்தால் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செய்த தவறை ஒப்புக்கொண்டு அதற்காக வருத்தம் தெரிவிப்பது என்பது சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மன வலிமையைக் காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிக்க முன்வருபவர்களின் தைரியத்தை தாம் பாராட்டுவதாகவும் குஷ்பு தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
