தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணப் பத்திரிகை சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த அழைப்பிதழின்படி, இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது .
அதன்படி பிப்ரவரி 26, 2026 (நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது). இதனைத்தொடர்ந்து மார்ச் 4, 2026 (புதன்கிழமை), மாலை 7:00 மணி முதல். தாஜ் கிருஷ்ணா, பஞ்சாரா ஹில்ஸ், ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

“எங்கள் குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆசியுடன், நானும் ராஷ்மிகாவும் வரும் பிப்ரவரி 26-ம் தேதி ஒரு சிறிய சுப நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். எங்களது இந்த புதிய தொடக்கத்தில், எங்கள் பயணத்தில் ஒரு அங்கமாக இருந்த உங்கள் அனைவரது ஆசியும் முன்னிலையும் இந்த தருணத்தை இன்னும் சிறப்பானதாக்கும்” என்று விஜய் தேவரகொண்டா பெயரில் அந்த அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருமணப் பத்திரிகை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டதாகச் சில தகவல்கள் வெளியாகினாலும், இது குறித்து விஜய் தேவரகொண்டா அல்லது ராஷ்மிகா தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் ஏதும் வரவில்லை. எனவே, இது ரசிகர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையானதா என்ற விவாதம் ஒருபுறம் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திருமணத்திற்குப் பிறகும் இந்த ஜோடி திரையில் ஒன்றாக வலம் வர உள்ளனர். குறிப்பாக, ‘ரணபாலி’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இது தவிர, விஜய் தேவரகொண்டா கைவசம் ‘ரவுடி ஜனார்தனா’ படமும், ராஷ்மிகா வசம் ‘காக்டெய்ல் 2’, ‘மைசா’ போன்ற படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
