மும்பையை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஷிபா ஷேக், ஒரு இளைஞரை காதலித்து வந்தார்.
அந்த இளைஞர் ஏற்கனவே 25 வயதுடைய மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்ததால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் பெண் பேச்சுவார்த்தைக்காக ஷிபாவை மசூதி அருகே வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஷிபாவைச் சுட்டுவிட்டுத் தப்பியோடினார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஷிபா, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தோட்டா அவரது கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கியதே உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த மும்பை போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொலையில் ஈடுபட்ட அந்தப் பெண்ணையும், அவருக்கு உதவியாக இருந்த 23 வயது இளைஞர் ஒருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
