நாய் நன்றியுள்ள விலங்கு என்பதற்குச் சான்றாகக் கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கோட்டயம் அருகே உள்ள பெருந்தொட்டி என்ற இடத்தில், பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்ட கேரள அரசுப் பேருந்துக்குள்  நாய் ஒன்று திடீரென உள்ளே புகுந்தது.

இதனைக் கண்டு பயணிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தாலும், அந்த நாயின் செயலைக் கண்டு பின்னர் கண்கலங்கினர். விசாரித்தபோது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பேருந்தில் அந்த நாயின் உரிமையாளர் வெளியூருக்குச் சென்றுள்ளார். அவர் சென்றது தெரியாமல், அவர் மீண்டும் வருவார் என அதே பேருந்து நிறுத்தத்தில் இரண்டு நாட்களாகக் காத்திருந்த அந்த நாய், அந்தப் பேருந்து வந்ததும் உரிமையாளரைத் தேடி உள்ளே ஏறியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Thanthi TV (@thanthitv)

“>

“>

 

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நடத்துனர் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்ட போதிலும், அது மீண்டும் பேருந்தின் பின்னாலேயே ஓடிய காட்சி காண்போரை நெகிழ வைத்தது. “எஜமானரைத் தேடும் இந்த அன்பு” குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.