தமிழக வெற்றிக் கழகம் தங்களது கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இருப்பினும், தற்போது வரை எந்தவொரு கட்சியும் அக்கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி சேரவில்லை.

இதன் காரணமாக, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் பெரும்பாலானோர் அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.