8-ஆவது சம்பளக் கமிஷன் பணிகள் ஒருபுறம் நடக்க, சில குறிப்பிட்ட துறையினருக்கு இப்போதே ‘இனிப்பு’ச் செய்தியைச் சொல்லியுள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-ஆவது சம்பளக் கமிஷன் (8th Pay Commission) பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு வங்கி ஊழியர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்களுக்குத் தனிப்பட்ட ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, சுமார் 46,322 ஊழியர்கள் மற்றும் 46,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயன் பெறுவார்கள்.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு 12.41% வரையும், நபார்டு வங்கி ஊழியர்களுக்கு சுமார் 20% வரையும் சம்பளம் உயர்கிறது.
இந்த உயர்வுகள் 2022-ஆம் ஆண்டிலிருந்து முன்தேதியிட்டு வழங்கப்படுவதால், ஊழியர்களுக்குப் பெரிய தொகையாக நிலுவைத் தொகையும் (Arrears) கிடைக்கவுள்ளது.
