வயது வெறும் எண்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 44 வயதிலும் தோனி காட்டும் ஆர்வம் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
கடந்த சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் பேட்டிங் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
View this post on Instagram
தோனி மைதானத்தில் தீவிரமாக வலைப்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. 2025 ஐபிஎல் ஏலத்தில் ‘அன்-கேப்டு’ (Uncapped) வீரராகத் தோனியை சிஎஸ்கே தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி பேட்டை கையில் எடுத்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள், “தல இஸ் பேக்!” எனக் கொண்டாடி வருகின்றனர். அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
