சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் பலர் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு ஹிந்தி பட பாணியில் உடையணிந்து சாகசம் செய்ய முயன்ற இளைஞர் ஒருவருக்கு தெரு நாய் சிம்மசொப்பனமாக மாறிய வேடிக்கையான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அப்படத்தில் வரும் ஹிருத்திக் ரோஷனைப் போலவே உடையணிந்து சாலையோரத்தில் அந்த இளைஞர் சாகசங்களைச் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த தெரு நாய் ஒன்று திடீரென அவரை நோக்கிப் பாய்ந்து குரைக்கத் தொடங்கியது.

இதைக் கண்டு நிலைதடுமாறிய அந்த இளைஞர், பயத்தில் நாயைச் சமாதானப்படுத்த முயலும் காட்சிகள் காண்போரைச் சிரிக்க வைக்கின்றன. மீஷோ இணையதளத்தில் வாங்கப்பட்ட மலிவான கிரிஷ் இது என்ற நகைச்சுவையான குறிப்புடன் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளி, தற்போது பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

ஆபத்தான முறையில் பொது இடங்களில் இத்தகைய சாகசங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், தெரு நாய்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் இந்தக் காணொளியின் கீழ் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.