கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் ரவி மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் கே.எஸ்.ரவிகுமார், நாசர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். டாடா’ பட புகழ் கணேஷ் கே பாபு இப்படத்தை இயக்கியுள்ளார்.
“ஒருநாள் புலி வரும்” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
