மும்பை மாலட் பகுதியில் இரண்டரை மாதமே ஆன நாய்க்குட்டி ஒன்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர் அப்பகுதியினரால் பிடிக்கப்பட்டு தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிராணியின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கோபம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by PURE ANIMAL LOVERS PAL WELFARE FOUNDATION (@palfoundation.in)

“>

இந்தச் சம்பவம் குறித்து விலங்கு நல அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த அந்த நாய்க்குட்டி தற்போது மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, அதன் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், விலங்குகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கச் சட்டங்கள் இன்னும் வலுவாக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.