மும்பையில் குடிபோதையில் இருந்த ஒரு நபர், அரை நிர்வாண நிலையில் ஓடும் பேருந்தில் ஏற முயன்று கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. பேருந்து நகரத் தொடங்கியதும் அதில் ஏற முயன்ற அந்த நபர், நிலை தடுமாறி கீழே விழுகிறார். அவருடன் இருக்கும் ஒரு பெண் (மனைவி எனக் கூறப்படுகிறது), அவரைத் தடுத்து சாலையின் ஓரத்திற்கு இழுக்கப் போராடுகிறார். ஆனால், அந்த நபர் பிடிவாதம் பிடித்து அந்தப் பெண்ணின் கையை உதறிவிட்டு மீண்டும் ஓடும் பேருந்தின் பின்னால் ஓடுவது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



​இரண்டாவது முறையாக அவர் பேருந்தில் ஏற முயன்றபோது, அதிர்ஷ்டவசமாகப் பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் தப்பினார். இருப்பினும், போதை தலைக்கேறிய நிலையில் தொடர்ந்து பேருந்தை விரட்டிச் சென்றார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, அது தற்போது ‘வைரல்’ ஆகி வருகிறது. மகாராஷ்டிராவில் ஜனவரி 13 முதல் 16 வரை மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.