சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, உண்மையான அன்பிற்கு அந்தஸ்தோ அல்லது பணமோ தடையாக இருக்காது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு இளம்பெண் உணவகம் ஒன்றில் பணியாளராக பணிபுரியும் தனது காதலனுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த உணவகத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
தனது காதலன் கடினமாக உழைக்கும் அதே இடத்தில் அவருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் நோக்கமாக இருந்தது. எதிர்பாராத விதமாக தனது காதலியை அங்கு கண்ட இளைஞர், ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
View this post on Instagram
“>
அந்த இளைஞர் முதலில் சற்று பதற்றமடைந்தாலும், பின்னர் தைரியமாக தனது உரிமையாளரிடம் அனுமதி கேட்டு அதே உணவகத்தில் தனது காதலியுடன் அமர்ந்து இரவு உணவை உட்கொண்டார். பணியிடத்தில் காதலியுடன் அமர்ந்து உணவருந்திய அந்த தருணத்தில் இருவரது முகத்திலும் தென்பட்ட புன்னகை பார்ப்பவர்களின் இதயங்களை நெகிழச் செய்தது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பலரும் பகிர்ந்து வருவதுடன், “உண்மையான காதலுக்கு வசதி வாய்ப்புகள் முக்கியமல்ல, ஒருவருக்கொருவர் கொடுக்கும் நேரமும் ஆதரவுமே முக்கியம்” என நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
