சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத் தீயாய் பரவி வரும் ஒரு காணொளியில், நடுரோட்டில் நின்றுகொண்டிருந்த ஒரு முதியவர் மீது பிரம்மாண்டமான யானை ஒன்று ஏறி அமர்வது போன்ற காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரை உறைந்து போகச் செய்துள்ளன. சாலையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க, யானை அந்த நபர் மீது ஒரு நாற்காலியில் அமர்வது போல் அமர்ந்து கொள்வதும், அந்த நபர் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிப்பதும் அந்த வீடியோவில் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Remix Master (@remixmaster.s2k)

ஆனால், இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மையை ஆய்வு செய்தபோது, இது நிஜமான சம்பவம் அல்ல என்பதும், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பதும் தெரியவந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது சவாலாக மாறியுள்ள நிலையில், இத்தகைய வீடியோக்களை உண்மை என நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.