தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டது, பாஜக மேலிடமும் அவரும் இணைந்து எடுத்த ஒரு திட்டமிட்ட முடிவு என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றுவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வகுத்த அரசியல் உத்தியின் ஒரு பகுதியே இது என்றும், தேர்தல் வியூகங்களை அமைப்பதில் அமித்ஷா மிகுந்த வல்லமை படைத்தவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவைப் போலவே தமிழகத்தின் அரசியல் களம் தற்போது அமித்ஷாவின் நேரடி மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட குருமூர்த்தி, அண்ணாமலைக்கு அகில இந்திய அளவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்
