இளமை என்பது உடலில் இல்லை, நம்முடைய எண்ணத்தில்தான் இருக்கிறது என்பதற்கு இந்தத் தாத்தாவே ஒரு சாட்சி. வயது ஏற ஏற உடல் தளர்ந்தாலும், அவரின் மன உறுதி இன்றும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஓய்வு என்பது உடலுக்குத்தானே தவிர, உத்வேகத்திற்கு இல்லை என்பதை அவர் நிரூபித்து வருகிறார்.
உயர்ந்த லட்சியமும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் இருப்பவர்களுக்கு முதுமை ஒரு தடையே இல்லை. “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்பது போல, வயதைக் கண்டு அஞ்சாமல் சுறுசுறுப்பாக இயங்கும் இவரது ஆர்வம், இன்றைய இளைஞர்களுக்கே ஒரு பாடமாக அமைந்துள்ளது.
Age तो बस एक नंबर है, असली खेल तो जज़्बे का होता है।
दादा जी को देखिए, शरीर भले थक गया हो पर हौसला आज भी दौड़ता है।बशीर बद्र की ये पंक्तियाँ इस पर खूब जँचती हैं –
“हौसलों के आगे उम्र की कहाँ औक़ात होती है, ये तो बस एक गिनती भर होती है।” pic.twitter.com/hMnYIfvq3X— Shalini Singh (@Bahujan_Era) January 11, 2026
பிரபல கவிஞர் பஷீர் பத்ரு சொன்னது போல, “உறுதியான மனதிற்கு முன்னால் வயது என்பதெல்லாம் வெறும் எண்ணிக்கையே தவிர வேறொன்றுமில்லை.” இவரைப் பார்க்கும்போது, வெற்றிக்குத் தேவை இளமை அல்ல, இடைவிடாத முயற்சிதான் என்பது மீண்டும் உறுதியாகிறது.
