மகள்கள் தான் தந்தைக்கு பாரமாக இருப்பார்கள் என்ற பொதுவான பிம்பத்தை உடைத்து, ஒரு மகள் தனது மாற்றுத்திறனாளி தந்தையைத் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.
சமீபத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், விமானப் பயணம் முடிந்து பயணிகள் இறங்கத் தயாராகும் காட்சி பதிவாகியுள்ளது. அங்கு நடக்க முடியாத நிலையில் அமர்ந்திருக்கும் தனது தந்தையை, அந்த இளம் பெண் லாவகமாகத் தனது முதுகில் சாய்த்துத் தூக்குகிறார். குறுகிய விமானப் பாதை வழியாக அவரைத் தோளில் சுமந்து வந்து, விமானத்திற்கு வெளியே காத்திருந்த சக்கர நாற்காலியில் மெதுவாக அமர வைக்கிறார்.
எந்தவிதத் தயக்கமும் இன்றி, தந்தையை ஒரு குழந்தையைப் போல அவர் சுமந்து செல்லும் காட்சி, ஒரு மகளின் தன்னலமற்ற அன்பையும், தந்தை மீதான அவரது பொறுப்பையும் பறைசாற்றுகிறது.
(X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 25 வினாடி வீடியோ, பதிவேற்றப்பட்ட சில மணிநேரங்களிலேயே 3.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சுமார் 17,000-க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ‘லைக்’ செய்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்:
“ஒவ்வொரு தந்தைக்கும் இப்படி ஒரு மகள் வாய்க்கப் பெற்றால் அது வரம்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
“ஊனம் என்பது ஒருவரது விதியாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு மகள் கிடைப்பது அவர் செய்த புண்ணியம்” என மற்றொருவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Daughter carrying her disabled father from his seat to his wheelchair.pic.twitter.com/NYRx2TVb5J
— Massimo (@Rainmaker1973) January 12, 2026
“அன்பும் உடல் வலிமையும் இணையும் உன்னத தருணம் இது” எனப் பலரும் அந்தப் பெண்ணின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
தந்தைக்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பை விளக்கும் இந்த காணொளி, இன்றைய பரபரப்பான உலகில் உறவுகளின் மேன்மையை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.
