பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், ஆங்கிலத்தில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனின் யூடியூப் சேனலில் இடம்பெற்ற ‘ஷார்ட் பால் சேலஞ்ச்’ (Short Ball Challenge) நிகழ்ச்சியில் பாபர் அசாம் கலந்துகொண்டார். அப்போது பாபரின் பேட்டிங் நுணுக்கங்கள் குறித்து பீட்டர்சன் கேள்விகளை எழுப்பினார்.

பேட்டிங் செய்யும்போது ஸ்டம்பிற்கு நேராக (Middle/Leg/Off stump) எந்த நிலையில் நிற்பீர்கள் என்று பீட்டர்சன் கேட்டார். அதற்குப் பதிலளித்த பாபர் அசாம், “பெரும்பாலான நேரங்களில்” (Most of the time) என்று கூற முயன்றார். ஆனால், அவரது உச்சரிப்பு சிற்றுண்டியான “மோமோஸ்” (Momos) என்பது போல தெரிந்தது.

இதைக் கவனித்த இணையவாசிகள், பாபர் அசாமின் “ஆங்கில மாஸ்டர் கிளாஸ்” (English Masterclass) இதுதான் என்று மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்னதாக ஒருமுறை ‘கூஸ்பம்ப்ஸ்’ (Goosebumps) என்பதற்குப் பதிலாக ‘பூஸ்பம்ப்ஸ்’ (Boosebumps) என்று அவர் கூறிய பழைய சம்பவத்தையும் பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

பாபர் அசாமின் பேச்சைக் கிண்டல் செய்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், அவருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர்.

 

“அவர் பேசுவதை சரியாகக் கவனித்தால் ‘மோஸ்ட்’ என்றுதான் சொல்கிறார்; கேட்பவர்களின் காதுகளில் தான் தவறு” என அவரது ரசிகர்கள் வாதிடுகின்றனர்.

மேலும், “ஆங்கிலம் தெரியாதது ஒருவரது ஆளுமையைக் குறைத்துவிடாது, விளையாட்டில்ய் அவர் சாதிப்பதே முக்கியம்” என்றும் சிலர் கருத்

து தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ‘பிக் பாஷ்’ (BBL) லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாபர் அசாம், 8 போட்டிகளில் 2 அரைசதங்கள் உட்பட 154 ரன்கள் எடுத்துள்ளார். மைதானத்தில் ரன்களைக் குவித்து வந்தாலும், மைதானத்திற்கு வெளியே அவரது ஆங்கில உச்சரிப்பு மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.