ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் வெல்டர் என்ற டிராவல் பிளாக்கர், இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ளார். அவர் இந்திய ரயிலின் ஏசி பெட்டியில் (AC Coach) பயணம் செய்த அனுபவத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ரயில் நிலையத்திற்கு வரும் அவர், பெட்டியின் உள்ளே இருக்கும் வசதிகள், இருக்கைகள் மற்றும் மின்விளக்குகள் குறித்துப் பேசுகிறார். மிகக் குறைந்த விலையில் இவ்வளவு வசதிகளுடன் கூடிய பயணம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ரயில் கழிவறையின் சுத்தம் ஓரளவுக்குத் தான் இருப்பதாகக் குறிப்பிட்டாலும், ஒட்டுமொத்தப் பயணம் அவருக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தந்துள்ளது.
இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும், “இன்னும் 5 வருடம் கழித்து வந்து பாருங்கள், இந்திய ரயில்வே உலகத்தரத்தில் இருக்கும்” எனப் பெருமையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதே சமயம், அவர் பயணித்தது ஸ்லீப்பர் கோச் என்றும், ஒருமுறை ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணித்துப் பாருங்கள் என்றும் சிலர் அவருக்குச் சவால் விடுத்துள்ளனர்.
