ரயிலில் கவலையுடன் அமர்ந்திருந்த முதியவர் ஒருவரை இந்திய இளைஞர் ஒருவர் தனது ஓவியத் திறமையால் நெகிழ வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. சீனாவில் ரயிலில் பயணம் செய்த அந்த முதியவர் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் சோகமாக இருப்பதை கவனித்த அந்த இளைஞர், உடனடியாக தனது காகிதம் மற்றும் பென்சிலை எடுத்து அந்த முதியவர் புன்னகைப்பது போன்ற அழகான ஓவியத்தை வரைந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by D H A R M E S H H A D I Y A | Artist (@_d_awesome_art_)

அந்த ஓவியத்தை முதியவரிடம் வழங்கியபோது, தனது உருவத்தைக் கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சியும் அவர் முகத்தில் மலர்ந்த புன்னகையும் காண்போரின் நெஞ்சத்தை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டு வரும் இந்த வீடியோவிற்கு, ஒருவரின் சோகத்தை போக்கி மகிழ்ச்சியை தருவது மிகப்பெரிய புண்ணியம் என இணையதளவாசிகள் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.