தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதோடு ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை போன்றவைகளும் வழங்கப்படும் என்றார்.

இதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.