அமெரிக்காவில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றிற்குள் வாலிபர் ஒருவர் குதிரை மீது அமர்ந்து உலா வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டீபன் ஹார்மன் என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சுமார் முப்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Stephen Harmon (@cowboyatheart82)

அந்த வீடியோவில் வணிக வளாக ஊழியர் ஒருவர் குதிரையை வெளியே கொண்டு செல்லுமாறு எச்சரிப்பதும் அதன் பிறகு பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த நபரையும் குதிரையையும் வெளியே அழைத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

நவீன மேற்கத்திய திரைப்படக் காட்சி ஒன்றைப் பார்ப்பது போல் இருந்த இந்த வினோதச் செயல் அங்கிருந்த வாடிக்கையாளர்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. தற்போது இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.