கனடாவைச் சேர்ந்த காலேப் ப்ரைசன் (Caleb Friesen) என்பவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். சுமார் 8 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வரும் அவர், தனது அனுபவங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“வெளிநாட்டுப் பயணிகளும், இன்ஃப்ளூயன்சர்களும் இந்தியாவை ஒரு அழுக்கான நாடாகவே உலகுக்குக் காட்டி வருகிறார்கள்; ஆனால் அது உண்மையான இந்தியா அல்ல” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இந்தியாவிற்கு வந்த பிறகு தான் இங்கிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி குறித்துத் தனக்குத் தெரிய வந்ததாக காலேப் கூறுகிறார். “இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் உணவு பற்றி மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.
ஆனால், இங்குள்ள தொழில்நுட்ப வளர்ச்சி (Tech Scene) மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வேகம் என்னை மலைக்க வைத்துவிட்டது. இந்திய இளைஞர்கள் எத்தகைய புதுமைகளைச் செய்து வருகிறார்கள் என்பதை உலகம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை” என அவர் புகழ்ந்துள்ளார்.
