மத்தியப் பிரதேசம் சிவபுரி மாவட்டம் அல்கி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து பவன் அருகே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. பிரஜேஷ் கிரி மகாராஜ் என்ற சாமியார், கடும் குளிரைத் தாங்க முடியாமல் அங்கிருந்த பொதுமக்களுடன் சேர்ந்து தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, அவர் அமர்ந்திருந்த மரக் கட்டிலிலேயே திடீரென பின்னோக்கிச் சரிந்து விழுந்தார்.

அவர் சரிந்து விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள், உடனடியாக அவரை மீட்டு தினார் (Dinara) ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு சில விநாடிகளில் ஒரு உயிர் பிரிவதைக் காட்டும் அந்த சிசிடிவி வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.