தமிழ் திரையுலகில் ஒரு படத்தின் வணிக ரீதியான வெற்றியைப் பொறுத்தே நடிகர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப்-10 நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், தனது கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தில் சுமார் ரூ.275 கோடி சம்பளம் பெற்று நடிகர் விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அரசியலுக்குச் செல்லும் முன் அவர் வாங்கியுள்ள இந்த உச்சகட்ட சம்பளம் திரையுலகையே அதிர வைத்துள்ளது. இவரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை பெற்று இரண்டாம் இடத்திலும், கார் பந்தயம் மற்றும் சினிமா என இரண்டிலும் கலக்கி வரும் அஜித்குமார் ரூ.180 கோடி வரை பெற்று மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றனர்.
‘விக்ரம்’ படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தனது சம்பளத்தை ரூ.150 கோடி வரை உயர்த்தியுள்ளார். மேலும், ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது; தற்போது அவர் ரூ.50 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் சூர்யா மற்றும் தனுஷ் தலா ரூ.50 – 70 கோடி வரை பெற்று முன்னிலையில் உள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி கண்டுள்ள பிரதீப் ரங்கநாதன் ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்று டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். கார்த்தி, சிம்பு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் இந்தப் பட்டியலில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர்.
