தமிழகத்தில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு போனஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி குரூப் சி,டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தலா 3000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னால் கிராம அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் இதற்காக 183.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இன்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொங்கல் போனஸ் தொடர்பான அறிவிப்பு வெளியானது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
