உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியில், ‘ஹிந்து ரக்சா தளம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென வீடு வீடாகச் சென்று வாள் மற்றும் கோடரிகளை விநியோகம் செய்த வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் இங்கும் வந்துவிடக்கூடாது என்றும், இந்துக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே இந்த ஆயுதங்கள் வழங்கப்படுவதாகவும் அந்த அமைப்பின் தலைவர் பூபேந்திரா தெரிவித்துள்ளார். சுமார் 250 வீடுகளுக்கு இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sun News Tamil (@sunnews)

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, களத்தில் இறங்கிய போலீஸார் சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகம் செய்ததாக அந்த அமைப்பைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான கத்திகள், வாள்கள் மற்றும் கோடரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டுதல், கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த அமைப்பின் தலைவர் பூபேந்திராவை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.