பொதுவாகத் திருவிழாக்களில் கூட்டத்தை ஈர்ப்பதற்காகவும், தங்களின் வீரத்தைக் காட்டுவதற்காகவும் இளைஞர்கள் பல ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், அதிவேகமாக ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பெரிய ‘போட் ஜாயிண்ட் வீல்’ (Boat Swing) ஊஞ்சலில், இளைஞர் ஒருவர் ஓடிச் சென்று எகிறிக் குதிக்க முயன்றார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது தலை ஊஞ்சலின் இரும்பு ராடில் மிக பலமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தால் அந்த இளைஞர் நிலைகுலைந்து, சுயநினைவை இழந்து ஊஞ்சலுக்குள்ளேயே சரிந்த காட்சி பார்ப்போரை நிலைகுலைய வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Walter Conahan (@walterconahan)

பலத்த காயமடைந்த அந்த இளைஞர் ஊஞ்சலில் இருந்து கீழே விழாமல், அங்கிருந்த சிறுமிகள் சிலர் பிடித்து சீட்டில் அமர வைத்தனர். தலை பயங்கரமாக மோதியதால் அவர் மயக்க நிலையில், எங்கே இருக்கிறோம் என்று கூட தெரியாமல் தடுமாறிய காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

@walterconahan என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “ஒரு நிமிடம் செய்த கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்” என நெட்டிசன்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி இது போன்ற விபரீத ஸ்டண்ட்களில் ஈடுபடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.