தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மத்திய அரசு போதிய கௌரவம் அளிக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா பேசியிருந்த கருத்துக்கு பாஜக தமிழ்நாடு தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி போன்று வேறு எந்த பிரதமரும் பாரதிக்கோ, வ.உ.சி.க்கோ இவ்வளவு மரியாதை செலுத்தியதில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “மகாகவி பாரதி இன்று உயிரோடு இருந்திருந்தால், பிரதமர் மோடிக்கு வாழ்த்துப்பாடல் பாடியிருப்பார்” என்று தமிழிசை கூறியுள்ளார். திருச்சி சிவாவின் கருத்து தவறானது என்றும், மோடி அரசு தமிழக விடுதலை வீரர்களுக்கு தொடர்ந்து உரிய அங்கீகாரம் வழங்கி வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
