நடிகர் ரஜினிகாந்தின் 50-வது வருடத் திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘படையப்பா’ திரைப்படம், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் (Re-release) வெளியிடப்பட உள்ளது.

ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சௌந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. தற்போதுப் படம் ரீ-ரிலீஸ் ஆவதையொட்டி, படக்குழு புதிய ட்ரெய்லர் ஒன்றை இன்று (டிசம்பர் 10) மாலை 7 மணிக்கு வெளியிட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளன்று ரசிகர்கள் இதனைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.