ரத்னகிரியைச் சேர்ந்த ஒரு வயது சிறுமி வேதா பரேஷ் சர்ஃபேர் அபூர்வ சாதனை படைத்து, இந்தியா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வெறும் 1 வயது, 9 மாதங்கள், 10 நாட்கள் வயதிலேயே, 100 மீட்டர் நீந்திய இளைய குழந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரத்னகிரி நகராட்சி நீச்சல் குளத்தில், 25×22 மீட்டர் அளவுள்ள நீச்சல் குளத்தை நான்கு சுற்றுகள் (100 மீ.) நீந்தி, 10 நிமிடங்கள் 8 விநாடிகளில் சாதனையை நிறைவு செய்தார். இதை உறுதிப்படுத்திய இந்தியா சாதனைப் புத்தகம், நவம்பர் 25ஆம் தேதி அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் அங்கீகாரத்தை வழங்கியது.
View this post on Instagram
சிறுமி வேதா நீந்தும் வீடியோக்கள் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில், சிறுமி தன்னம்பிக்கையுடன் நீர்க்குளத்தில் குதித்து, எளிதாக சுற்றுகளை முடிப்பது காணப்படுகிறது.
நவம்பர் 2025இல், டோம்பிவலியை சேர்ந்த 10 வயது ஆன்வி ஷைலேஷ் சுவர்ணா, அடல் சேதுவிலிருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரை 17 கிலோமீட்டர் திறந்த கடல் நீச்சலை முடித்து தனித்த சாதனை படைத்தார்.
அவர் தனது 10வது பிறந்தநாளிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதிகாலை 2.26 மணிக்கு நீச்சலைத் தொடங்கிய ஆன்வி, 5.11 மணிக்கு இலக்கை எட்டி, 2 மணி 44 நிமிடங்களில் பயணத்தை நிறைவு செய்தார்.
மேலும் ஆகஸ்ட் 2025இல், நவி மும்பை – வாஷியைச் சேர்ந்த மந்த்ரா மங்கேஷ் குர்ஹே (16), மலேசியாவில் நடைபெற்ற 2 கிமீ ஓஷன்மேன் சர்வதேச நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்தார். 12–19 வயது பிரிவில் போட்டியிட்ட அவர், 36 நிமிடங்கள் 23 விநாடிகளில் முடித்தார். அனைத்து வயதுப் பிரிவுகளிலும் வேகமான பெண் நீச்சல் வீராங்கனை விருது, என இரு பெருமைகளையும் பெற்றுத் தந்தது.
