சமூக ஊடகங்களில் தற்போது ஒரு இளைஞரின் ஸ்டண்ட் வீடியோ வெளியாகி, பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. இந்தக் காணொளியில், அந்த இளைஞர் ஓடி வந்து உயரமான கட்டிடத்தின் கூரையில் இருந்து காற்றில் குதிக்கிறார். அடுத்த வினாடியே, அவர் தனது மின்னல் வேகச் சுறுசுறுப்பால், பக்கவாட்டில் இருந்த தடுப்பை (ரெயிலிங்)ப் பிடித்துக்கொண்டு, கீழே விழாமல் மீண்டும் மேலே ஏறிவிடுகிறார்.

இந்த அபாயகரமான சாகசம், மூன்று நாட்களுக்குள் சுமார் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.​ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் உயிர் இழப்பு நிச்சயம் என்பதால், இந்தச் சாகசத்தின் உண்மைத்தன்மை குறித்துப் பல பயனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிலர், இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

உண்மையாக இருந்தால், ‘லைக்ஸ்’ மற்றும் வியூஸ்களுக்காக இப்படி உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் அந்த இளைஞருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஸ்டண்ட் வீடியோ பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.