அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் மீண்டும் தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணைவதாக அறிவித்துள்ளார்.
​ஈரோடு தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த கே.கே.செல்வம், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, திமுக தலைமையால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அ.தி.மு.க.வில் இணைவதாகத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராகக் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.கே.செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இணைவு, கோபிசெட்டிப்பாளையம் அரசியல் களத்தில் புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.