தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தவெக உள்ளிட்டவை தங்கள் பலத்தை அதிகப்படுத்த தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி முன்னிலையில், நத்தம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் பழைய கட்சியிலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான திராவிட மாடல் அரசின் நல்லாட்சி 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்டம் – நத்தம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த பல்வேறு மாற்று கட்சியினர் அக்கட்சிலிருந்து விலகி… pic.twitter.com/MhNGP3AB3d
— R.SAKKARAPANI – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@r_sakkarapani) December 6, 2025
“>
அமைச்சர் சக்கரபாணி, புதிதாக இணைந்த மாற்றுக் கட்சியினருக்குச் சால்வை அணிவித்து, அவர்களை திமுகவில் அன்புடன் வரவேற்றார். இந்த இணைப்புகள் குறித்துப் பேசிய அரசியல் நோக்கர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் திமுகவின் பலத்தை மேலும் வலுப்படுத்த இந்தப் புதிய உறுப்பினர்களின் இணைப்பு உதவும் என்று தெரிவித்துள்ளனர். மாற்றுக் கட்சியினரின் இந்தக் கூண்டோடு இணைப்பு, நத்தம் தொகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
