ராணிப்பேட்டை மாவட்டம் சிறுவளையம் கிராமத்தில் நேற்று (டிசம்பர் 5) அதிகாலையில் கனகா என்ற பெண் கிணற்றில் கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடிப் பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கிணற்று விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.