தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை ஸ்டூடியோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வீடியோ வெளிவந்துள்ளது.

நடிகர் கார்த்தியின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள நிலையில் வருகிற 12-ஆம் தேதியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.