தமிழக அரசியலில் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக நிர்வாகிகள் முக்கிய சந்திப்பை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் பேசுகையில், வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமையும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவர் அந்தக் கூட்டணி அதிமுகவா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமா என்று உறுதியாகக் குறிப்பிடவில்லை.

இந்தச் சூழ்நிலையில், பாமக நிர்வாகிகள் தரப்பு எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதன் மூலம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கொங்கு மண்டலம் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், அது திமுக கூட்டணிக்குப் பெரும் சவாலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈபிஎஸ் உடன் அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் சந்திப்பு #EdappadiPalanisamy #ADMK #PMK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/AKYIJaI4vy
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 3, 2025
“>
