அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27-ஆம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துத் தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், கோபியில் உள்ள தனது அலுவலகத்தில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் ஆகியோரின் உருவப்படங்களுடன் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வாசகத்துடன் புதிய பெயர் பலகையை அவர் வைத்துள்ளார். இந்நிலையில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, செங்கோட்டையன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“>

 

அந்த வாழ்த்துப் போஸ்டரிலும் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய், புஸ்சி ஆனந்த் ஆகியோரின் படங்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன. “தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்” என்று அவர் பதிவிட்டிருந்த இந்த வாழ்த்துப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.