தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், புதுச்சேரியில் நடத்தவிருந்த ரோடு ஷோ (மக்கள் சந்திப்பு) நிகழ்ச்சிக்கு மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அனுமதி மறுத்த நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதன் காரணமாக, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து அனுமதி கோரியுள்ளார். முதல்வரும் முதல் கட்டமாக அனுமதி மறுத்த நிலையில், இன்று (டிச.03) இரண்டாவது முறையாக மீண்டும் புதுச்சேரி முதல்வரை ஆனந்த் சந்தித்துப் பேசினார். எனினும், அரசு தரப்பிலிருந்து அனுமதி குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்தச் சூழ்நிலையில், நடிகர் விஜய் தனது புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்வை ஒத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது
