வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை ஆரஞ்சு அலர்ட்டாகக் குறைக்கப்பட்டபோதிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை தொடர்வதாலும், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், மாவட்ட நிர்வாகம் நாளை (டிச. 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் இதற்கான உத்தரவை அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
