பிரபல நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை இன்று (டிச. 1) இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் திருமணம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் லிங்க பைரவி கோவிலில் இன்று காலை மிகவும் எளிமையாக நடந்துள்ளது.

திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட 30 விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும், சமந்தா சிவப்பு நிறப் புடவையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சமந்தா, ஏற்கெனவே நடிகர் நாக சைதன்யாவை மணந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்ற நிலையில், ராஜ் நிடிமோருவுக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

சமந்தாவும், ராஜின் முன்னாள் மனைவி ஷ்யாமலி டேயும் (Sshyamali De) விவாகரத்து செய்த நிலையில், ஷ்யாமலி டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “விரக்தியானவர்கள் விரக்தியான செயல்களைச் செய்கிறார்கள்” என்று பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் நிடிமோரு இயக்கிய ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரில் நடித்தபோதுதான் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.